கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார். பொதுவாகவே மூணார் டவுனில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சுற்றுலா பயணிகளில் அதிக வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகரித்து காணப்படுகிறது என்றே சொல்லலாம். இதனால் பாதசாரிகளுக்கும் மற்ற பயணங்களை மேற்கொள்கிறவர்களுக்கும் அதிகமான சிரமத்தை ஏற்படுத்துகின்றன. போக்குவரத்து சிக்கல்கள் உண்டு என்று இடுக்கி மாவட்டத்தின் சார்பில் அரசாங்கம் பலமுறை இதற்கான பல தீர்மானங்களை எடுப்போம் என்று கூட்டங்கள் நடத்தி முடிவெடுக்கப்படுகின்றன.ஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்பொழுது நடந்த கார்த்திகை தீபத் திருவிழாவில் மூணாறில் அதிகமான வாகன நெரிசல் ஏற்பட்டு நடைபாதையில் நடப்பவர்களுக்கு கூட இடமில்லாமல் போகும் அளவிற்கு மூணார் டவுன் ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் மாதங்களில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு போன்ற நாட்களில் விடுமுறை நாட்களும் இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும். அச்சமயங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும் எனவே அரசு எடுத்த தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தி வரும் சுற்றுலா பயணிகளுக்கும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் சுலபமாக சென்று வரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலும் அனைத்து கட்சிகள் சார்பிலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்.
மூணாறு.