கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு இன்று துவங்கி, வாரந்தோறும் சனிக்கிழமை, ஜன. , 20ம் தேதி வரை சிறப்பு ரயில் (எண்: 07305) இயக்கப் படுகிறது. காலை, 10: 30 மணிக்கு ஹூப்ளியில் புறப்படும் ரயில், மறுநாள் காலை, 8: 15 மணிக்கு கோட்டயம் சென்று சேருகிறது.
மறுமார்க்கமாக, நாளை (டிச. , 3ம் தேதி துவங்கி) ஜன. , 21 வரை ஞாயிறுதோறும் காலை, 11: 00 மணிக்கு கோட்டயத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை, 9: 50 க்கு ஹூப்ளி சென்றடைகிறது. இதேபோல், செவ்வாய்கிழமைகளில் ஹூப்ளியில் இருந்து மற்றொரு சிறப்பு ரயிலும் (எண்: 07307), புதனன்று கோட்டயத்தில் இருந்து சிறப்பு ரயில் (எண்: 07308) இயக்கப்படுகிறது.
மேற்கண்ட நான்கு சிறப்பு ரயில்களும் பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், ஒயிட்பீல்டு, பங்காருபேட்டை, சேலம், ஈரோடு ஸ்டேஷன்களில் நின்று, திருப்பூர், கோவையில் நிற்காமல், இருகூர் வழியாக போத்தனுார் பயணிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்ட பெரும்பாலான சபரிமலை சிறப்பு ரயில்கள், திருப்பூர், கோவையில் சென்று செல்லும் நிலையில், ஹூப்ளி – கோட்டயம் இரு ரயிகள், இரு மார்க்கத்திலும், திருப்பூர், கோவையில் நிற்காது என்ற அறிவிப்பு, ஐயப்ப பக்தர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.