சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்ததில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தன்னார்வலர்கள் உதவியுடன் அரிசி, பருப்பு, தண்ணீர் பாட்டில்கள் நாப்கின் உட்பட அத்தியாவசியமான பொருட்கள், அந்தந்த தாலுகாவில் பெறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிவாரண பொருட்கள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியை ஆட்சியர் கிராந்தி குமார் நேரில் பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.