கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் மற்றும் மூணார் சுற்றி அனைத்து பகுதிகளும் சுற்றுலாத்தலமாக வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடுக்கி காஞ்சியார் தேக்குமர வனப்பகுதியில் இடுக்கி நீர் அருவிக்கு செல்லக்கூடிய பாதையில் வனத்துறையினர் கம்பி வேலி அமைப்பு தடுப்பணைகளை கட்டியுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விசாரித்த போது அங்கு சுற்றுலாவுக்கு வரும் பலரும் இடங்களை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றங்கள் அதிகரிக்காமல் இருப்பதற்காகவும் இதை தடை செய்ததாக கூறினர்.மீண்டும் இதற்கு தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்த போது வனத்துறையினர் வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் இது முற்றிலும் சுற்றுலா வளர்ச்சியை தடை செய்வதாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர் எனவே கேரளா சுற்றுலாத்துறை உடனடியாக போர்க்கால அடிப்படையில் பிரச்சினை சரி செய்ய முன்வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்.
மூணாறு.