கோவை மாவட்டம் போத்தனூர் எல்லைக்கு உட்பட்ட டி1 ராமநாதபுரம், டி3 போத்தனூர், டி5 சுந்தராபுரம், காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இந்தப் பகுதிகளில் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தங்களது செல்போன்கள் திருட்டு போனதாக புகார் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், புகார்கள் அடிப்படையில் இந்தப் பகுதி காவல் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகள் தனி கவனம் எடுத்து திருடப்பட்டுள்ள செல்போன்களை ஐ. எம். ஈ. ஐ. நம்பர் மூலமாக கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று டி3 காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் புகார் தாரர்களிடம் ஒப்படைத்தார். தங்களது செல்போன்களை திரும்பப்பெற்ற புகார்தார்கள் மணமகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வாங்கி சென்றனர்.
இந்நிகழ்ச்சியில்துணை ஆணையாளர் உதவி ஆணையாளர், ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
மாநகர காவல் ஆணையாளர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதனை உடனடியாக காவல்துறை கவனத்தில் எடுத்து விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களது செல்போன்களை கவனக்குறைவாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் தங்களது செல்போன்களை தங்களது இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அஜாக்கிரதை வைத்து விடுவதும்
கவனக்குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளார். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா.