கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலாத்தலமான மூணாறு டவுனில் கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடத்திற்கான விடுமுறையை அடுத்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.அதனால் ராஜமலை, மாட்டுப்பெட்டி அணை, எக்கோ பாய்ண்ட், குண்டளை அணை உள்பட சுற்றுலா பகுதிகள் அனைத்தும் களைகட்டின. ராஜமலையில் வரையாடுகளை காணவும், மாட்டுபட்டி அணையில் சுற்றுலா படகுகளில் பயணிக்கவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பயணிகளின் வருகையால் மூணாறு நகர் உள்பட சுற்றுலா பகுதிகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல கி.மீ., தூரம் அணி வகுத்து நின்றன.ராஜமலைக்குச் செல்லும் நுழைவு பகுதியான 5ம் மைல் பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசலால் மூணாறு-உடுமலைபேட்டை இடையே மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணிகள் தவித்ததால் திட்டமிட்டபடி சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை.
இந்தப் போக்குவரத்து நெரிசல் காரணமாக இங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கும் எங்கும் செல்ல முடியாத அளவிற்கு மாறுகிறது.போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மூணார் டவுனில் என்போர்ஸ்மென்ட் ஸ்குவாடு (ENFORCEMENT SQUAD)அமைப்பதற்கு தேவிகுளம் மண்டலம் அட்வகேட் ஏ.ராஜா எம்.எல்.ஏ மற்றும் சப்-கலெக்டர் மற்றும் ஜே கிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித்,மூணாறு.
One Response
Munnar don’t have a good hospital, people are depending on nearby cities. Local authority to take necessary steps to solve the traffic issue. During the festival season many tourists may visit to munnar, please plan accordingly.