தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த முன்னோடியும் இளைஞர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்க்க தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து சிறுபான்மை மக்களை சிந்திக்க வைத்து ஏன் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வியை அவர்களிடம் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வரும் தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறையின் தலைவர் திரு அஸ்லாம் பாஷா அவர்களின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் சில விஷமிகள் ஒன்று சேர்ந்து அவருடைய வளர்ச்சியை தடுக்கும் நோக்கோடு செயல்பட்டு வரும் கயவர்களை கண்டிக்க அவர் கைப்பட அனைத்து அரசுத் துறைகளுக்கும் புகார் மனு அளித்துள்ளார் அதன் விவரம்:-
வாணியம்பாடியில் போலி பட்டா தயாரித்து வீட்டை விற்க்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத் துறை மாநில தலைவர் அஸ்லம்பாஷா வருவாய்த்துறை மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு.
வாணியம்பாடி, டிச.7- வாணியம்பாடி நூருல்லாபேட்டை, குண்டு முஹம்மத் இப்ரஹிம் தெருவில் வசித்து வருபவர் அஸ்லம்பாஷா. இவர் கடந்க 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி சிறுபான்மைதுறை மாநில தலைவராக உள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் அவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பது:-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியில் 900 சதுர அடி டோக்கன் பட்டா இடத்தை அப்பகுதியை சேர்ந்த சலாவுத்தீன், அவருடைய மகன் சாமியுல்லா ஆகியோர் 75 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி தந்தனர். மேலும் அந்த இடத்தில் நான் வீடு கட்டியுள்ளேன். அந்த வீட்டை சையத் பாஷா என்பவருக்கு மாதம் ரூபாய் 2 ஆயிரம் என வாடகைக்கு விட்டு இருந்தேன்.
அந்த வீட்டிற்க்கு டோக்கன் பட்டா மூலமாக மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சொத்து வரி ஆகியவற்றை வாங்கி தருவதாக சலாவுத்தீன், அவருடைய மகன் சாமியுல்லா, பிஸ்மில்லா நகர் பள்ளிவாசல் முத்தவல்லி ரபீக் அஹமத் ஆகியோர் ரூ.12 ஆயிரம் பெற்று கொண்டு வாங்கி தந்துள்ளனர். மேற்படி வீட்டின் சொத்து வரி உட்பட அனைத்தும் இன்றைய நாள் வரை தவறாமல் செலுத்தி உள்ளேன். இந்நிலையில் வீட்டை விற்பனை செய்ய இடத்தின் உண்மை தன்மை சான்று கேட்டு வருவாய்துறை அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தேன்.
வருவாய்த்துறையினர் விசாரணையில் எனக்கு வழங்கி இருந்த பட்டாவில் எனது பெயர் உரிமையாளர் இடத்தில் இல்லை. மேலும் வீட்டில் வாடகைக்கு குடி இருந்த சையத்பாஷா சீட்டு நடத்தி, மக்களை ஏமாற்றி, வீட்டை விட்டு தலைமறையாகியுள்ளார். இந்த சம்பவத்தை பயன்படுத்தி சையத்பாஷா குடியிருந்த என்னுடைய வீட்டை அபகரிக்கும் நோக்கில் அப்பகுதியை சேர்ந்த அமீன், சமியுல்லா, சத்தாம், நவுஷாத் ஆகியோர் பூட்டி இருந்த வீட்டின் பூட்டு மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா உடைத்துள்ளனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் அமீன், சமியுல்லா, சத்தாம், நவுஷாத் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்ட போது சையத் பாஷா தங்களுக்கு வீடு விற்றுள்ளதாக தெரிவித்தனர். மேலும் விசாரணையில் என்னுடைய புகைப்படம் ஒட்டிய ஒரு போலி பட்டாவை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த பட்டா முற்றிலும் போலியானது.
என்னுடைய நற்பெயரை கெடுக்கும் வகையில் போலி பட்டா தயார் செய்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. ஆகையால் போலி பட்டா தயாரித்து கொடுத்த சலாவுதீன், சமியுல்லா, ரபீக் அஹமத் ஆகியோர் மீதும், காவல் நிலையத்தில் போலி பட்டாவை அவர்களது ஆவணம் என்று சமர்ப்பித்தும், வீட்டை விற்பனை செய்ய முயற்சித்த அனைவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்னுடைய சுவாதினத்தில் உள்ள வீட்டிற்க்கு பட்டா வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
-MMH.