கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையை அடுத்துள்ள பன்னி மேடு முதல் பிரிவு என்னும் பகுதியில் உள்ள குடியிருப்பில் கணேசன் கருப்பாத்தாள் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் மாலை பணிக்கு சென்று விட்டு திரும்பி வந்து சமையல் செய்ய ஆரம்பித்துள்ளனர் அப்பொழுது எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்தது இதனால் செய்வதறியாது தவித்த அவர்கள் அச்சத்தில் அலறியுள்ளனர் இதனைக் கேட்டு அருகில் உள்ளோர் ஓடி வந்து பார்த்துள்ளனர் அப்பொழுது தீ மள மளவென பரவி உள்ளது உடனடியாக வால்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுத்து பாதுகாத்து உள்ளனர் இதன் பின்னரே அருகில் உள்ள பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.
இது போன்ற அசுபாவிதங்கள் நடக்கும் போதுதான் தெரிகிறது நாம் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இதுபோன்று ஒவ்வொரு எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளிலும் தீ அணைக்கும் கருவி மற்றும் நெருப்பு பரவாமல் தடுக்கும் பொருட்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்திருக்க வேண்டும் அப்பொழுது தான் சிறு சிறு தீ விபத்துகள் பெரும் தீ விபத்தாக மாறாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-ச. ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.