தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடராம் அருகே இந்திராநகரை சேர்ந்த கடற்கரை மகன் வேல்முருகன்(50) இவர் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருந்து வருகிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர் நேற்று இரவு7.30 மணிக்கு ஓட்டப்பிடாரத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புதியம்புத்துர் நோக்கி சென்றுள்ளார். அப்போது வடக்குப் பரும்பூர் அருகே வந்தபோது தூத்துக்குடியில் இருந்து கந்தசாமிபுரம் வந்தபோது நாய் குறுக்க வந்ததால் பஸ் மீது பைக் மோதி பலத்த காயம் அடைந்தார்.
உடனே காவல்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இச் சம்பவத்தை தொடர்ந்து ஓட்டுனர் திருநெல்வேலி தச்சநல்லூர் புதுக்குளம் வடக்கு தெருவை சேர்ந்த முத்துக்குமார்(54) மற்றும் நடத்துனர் முருகராஜ் ஆகியோர் பஸ்ஸை அதே இடத்தில் விட்டு விட்டு ஓட்டப்பிடாரம் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் மற்றும் நடத்துங்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்த வேல்முருகனுக்கு செல்வி என்ற மனைவியும் கவிதா, பிரியங்கா ஆகிய மகள்களும் கதிரவன் என்ற மகனும் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.