கோவில்பட்டியில் குறள்வழி நடக்க திருக்குறள் புத்தகங்கள் வழங்கல்
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குறள்வழி நடக்க திருக்குறள் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளுவர் தின விழா,கோவில்பட்டி ரோட்டரிசங்கத்தின் 49வது ஆண்டு துவக்க விழா ஜனவரி 16ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு குறள் வழி நடக்க 200 க்கும் மேற்பட்ட திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வம் முன்னிலை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சரவணன் நாராயணசாமி,முத்து முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்.
–முனியசாமி.