பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி குருடிக்காடு என்ற பகுதியில் கேரள காவல்துறையினர் வாகன சோதனையின் போது கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த இன்னோவா காரை நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது இதனை அடுத்து காவல்துறையினர் தனது வாகனத்தில் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரின் சீட்டுக்கு கீழே ரகசிய அறை அமைத்து 1.90 கோடி ரூபாய் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காரில் இருந்தவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் அங்காடிப்புரத்தை சேர்ந்த முகமதுகுட்டி மற்றும் புத்தனங்காடியை சேர்ந்த முகமதுநிசார் என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணை மேற்கொண்டதில் பணத்தை மலப்புரம் பகுதியில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க கொண்டு சென்றது தெரியவந்தது இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் கோவையில் இருந்து ஹவாலா பணத்தை கொடுத்தவர் யார் மலப்புரத்தில் பணத்தை பெறுபவர் யார் என்ற கோணத்தில் பாலக்காடு மாவட்டம் கஸ்பா காவல் நிலைய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.