நெகிழி என்று அழைக்கப் படும் ஒருமுறை பயன்படுத் தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டு, பாலித்தீன் கவர்கள் உள்ளிட்ட 14 வகை யான பிளாஸ்ட்டிக்பொருட் களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், கடை களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
கோவை மாநகரில் கடந்த ஆண்டு (2023) கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனையை தடுக்க அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை 1451 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது 11 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.