கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களின் கரைகளை அழகுபடுத்தி பொதுமக்கள் நடை பயிற்சி செய்வதற்கும் குழந்தைகள் விளையாடுவதற்கும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு குளக்கரைகள் அழகு படுத்தப்பட்டன அதேபோல் குறிச்சியில் அமைந்துள்ள குறிச்சி குளத்தையும் கரைப்பகுதியை அழகு படுத்தி பண்டைய தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பண்டிகைகள் பற்றிய சின்னங்கள் அமைக்கப்பட்டு அழகுப்படுத்தப் பட்டன மேலும் குறிச்சி பகுதியில் இந்தியாவிலேயே தமிழ் எழுத்துக்களால் ஆன ஐயன் திருவள்ளுவருக்கு மிக பெரிய சிலையை நிறுவி தமிழுக்கும்,
குறிச்சி மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர் இந்த பிரம்மாண்ட சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி , கோவை மாநகராட்சி ஆணையாளர். சிவகுரு பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்தர், கோவை மாநகராட்சி துணை மேயர். வெற்றிச்செல்வன், ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன் , மாமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், முருகேசன், பாபு, அஸ்லாம் பாஷா, குணசேகரன் , சரளா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.