சிறுவாணி சாரல் நண்பர்கள் குழுவின் சார்பாக நடைபெற்ற கிராமிய பொங்கல் விளையாட்டு விழா!!!
கோவை மாநகர் சுந்தராபுரம் சாரதா மில் ரோடு பகுதியை சேர்ந்த முத்துமாரியம்மன் கோவில் வீதியில் *”சிறுவாணி சாரல்”* நண்பர்கள் குழுவின் சார்பாக கிராமிய பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை சுமார் 9:30 மணி அளவில் முத்துமாரியம்மன் கோவில் வீதி மற்றும் அருகில் உள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் முத்துமாரியம்மன் கோவிலில் ஒன்று கூடி கிராமிய பொங்கல் விழாவை தொடங்கினர்.
முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பொங்கல் வைப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை *”சிறுவாணி சாரல்”* நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
மாலை 6:00 மணிக்கு மேல் கிராமிய பொங்கல் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. சிறுவர் சிறுமியர் மகளிர் மற்றும் ஆடவருக்கான லெமன் அண்ட் ஸ்பூன், மியூசிக் சேர், கயிறு இழுத்தல் மற்றும் உறியடி போட்டிகள் நடைபெற்றது நிறைவாக நடன நிகழ்ச்சி நடைபெற்றது. உறியடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேமுதிக மாநில நிர்வாகி வாழை இலை முருகேஷ் அவர்கள் சிறப்பு பரிசுகளை வழங்கினார் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறுவாணி சாரல் நண்பர்கள் குழுவின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு “சிறுவாணி சாரல்” நண்பர்கள் குழுவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிராமிய பொங்கல் திருவிழாவினால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சியும் உற்சாகமும் மிகுந்து காணப்பட்டது.
நாளை வரலாறு செய்திகளுக்காக, கோவை மாவட்ட தலைமை நிருபர்
+சி.ராஜேந்திரன்.