தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில் கட்டபொம்மன் குடியிருப்பு பகுதியில் புதிதாக பஞ்சாயத்து அலுவலகம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறதி திட்டத்தில் ரூ.23.57 லட்சத்தில் 2023-24 ஆண்டு புதிய கட்டடத்தை 75வது குடியரசுத் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுபதி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி )ஐஸ்வர்யா அவர்கள் ஊராட்சி உதவி இயக்குநர் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, கிரி, பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி தலைவர் கமலாதேவி யோகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.