வால்பாறையில் நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகளால் பரபரப்பு!! காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!!
கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் பொங்கல் திருவிழாவை ஒட்டி அனைத்துப் பகுதி எஸ்டேட்டுகளிலும் பொதுமக்கள் உற்சாகமாக பொங்கல் வைத்து சூரிய வழிபாடு மற்றும் அவர்களது இஷ்ட தெய்வங்களுக்கு படையல் இட்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.
தொடர் விடுமுறையை ஒட்டி தொழிலாளர்கள் பொருட்கள் வாங்கவும் சுற்றுலா பயணிகள் வருகையும் வால்பாறை பகுதியில் அதிகரித்து காணப்பட்டது எஸ்டேட் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள்,வாகன ஓட்டுநர்கள் சுற்றுலா வந்திருந்தவர்கள் என்று வால்பாறையில் கூட்டம் அதிகமாக இருந்தது இந்த சமயத்தில் வால்பாறையின் முக்கிய சாலையில் அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் எதிரில் வந்த டாடா சுமோ மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றின் மீது மோதி எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் வானங்களை அடித்துக் கொண்டு வருவதை பார்த்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் நாலாபுரமும் சிதறி ஓடினர் இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தினால் சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் அவர்கள் அனைவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபோன்று மலைப்பகுதிகளில் இயக்கம் அரசு பேருந்துகளில் நிலையை எண்ணி பாருங்கள்
வால்பாறை மற்றும் அதன் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தையும் முறையாக பராமரிக்க வேண்டும் முக்கியமாக அரசு பேருந்துகளின் பிரேக் பிடிக்கும் திறனை அடிக்கடி சோதிக்க வேண்டும் அப்பொழுதுதான் இது போன்ற விபத்துகளில் இருந்து பொது மக்களை காப்பாற்ற முடியும் என்று பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து வால்பாறை அரசு பேருந்துகள் பணிமனை மேலாளர் இடம் கோரிக்கை விடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை நிருபர்
–சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
–திவ்யகுமார்.