வால்பாறையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துமக்கள் உயிரோடு அரசு விளையாடுவதாக வால்பாறை பரமசிவம் குற்றச்சாட்டடு.
https://youtu.be/ziqvVergClI?si=zNb7qvg-3gXZf7i9
கோவை மாவட்டம் வால்பாறை வெள்ளமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் இருந்து வால்பாறையை நோக்கி அரசுப் பேருந்து நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
பேருந்து வால்பாறை நகா் காவல் நிலையம் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு தாழ்வான சாலையில் சென்றபோது திடீரென பிரேக் பிடிக்கவில்லை. இதனால் அண்ணா சிலை முன்பு இருந்த கட்சிகளின் கொடிமரம் மற்றும்
வாகனங்கள் மீது பேருந்து மோதியது. அந்நிலையில் வால்பாறையில் இருந்து கோவைக்குச் சென்ற அரசுப் பேருந்து மீது நேருக்கு நோ் மோதி நின்றது.
இந்த விபத்தில் ஓட்டுநா் செல்வகுமாா் உள்பட பயணிகள், சாலையில் நடந்து சென்றவா்கள் என 30 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் 6 போ் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
விபத்து குறித்து வால்பாறை காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த விபத்து குறித்து வால்பாறை பரமசிவம் கூறுகையில்
வால்பாறையில் அரசு பேருந்துகள் சரியான முறையில் பராமரிப்பது இல்லை இதனால் அரசு போக்குவரத்து கழகத்தால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எதற்காக இருக்கிறார் என்று தெரியவில்லை வாகனங்களை முறையாக பரிசோதிக்கும் போக்குவரத்து ஆய்வாளர் பெயரளவுக்கு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லாமல் பயத்தை ஏற்படுத்தும் பயணமாகவே நாளொரு வண்ணம் பொழுதூர் வண்ணம் இருந்து வருகிறது இதுகுறித்து அரசும் கண்டு கொள்வதில்லை இந்நிலையில் இது தொடர்பாக C I T U சங்கத்தின் சார்பாக 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கடந்த வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் இந்தப் போராட்டம் மக்களுக்கான போராட்டம் என்பதே நிதர்சனமான உண்மை இதை அரசு உணர வேண்டும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தரமான பேருந்துகளை இயக்க அரசும் போக்குவரத்து துறையும் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும்.
வால்பாறை விபத்தில்bபேருந்தை பேருந்து காப்பாற்றியது போல மக்களை அதிகாரம் உள்ள மக்கள் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என கூறினார்.
இந்தக் கோரிக்கையை அரசு ஏற்குமா..? நிராகரிக்குமா..?பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத் துணைத் தலைமை நிருபர், பொள்ளாச்சி
–சுரேஷ்.