கோவை மாவட்டம் வால்பாறை அரசு போக்குவரத்து ஊழியர்களும் ஓய்வு பெற்ற ஊழியர்களும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 9ஆம் தேதி பேருந்துகள் வால்பாறை பகுதியில் இயக்காமல் முழு ஆதரவு தர வேண்டும் என்று வால்பாறை பகுதியில் துண்டு நோட்டீஸ் விநியோகம் செய்து ஓட்டுநர் மற்றும் நடத்தினர் ஆதரவு திரட்டினர்.
இந்நிகழ்விற்கு வால்பாறை M L A அமுல் கந்தசாமி தலைமை தாங்கினார்.
C I T U மண்டல பொதுச்செயலாளர் வேளாங்கண்ணி முன்னிலை வகித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் C I T U, A I T U C, A T B பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இதர தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டனர்.
வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் வால்பாறை பகுதியில் போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்று சேர்ந்து விடியா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விதமாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதனை அடுத்து C I T U சங்கத்தின் மண்டல பொதுச்செயலாளர் வேளாங்கண்ணி பேசுகையில் வருகின்ற 9ஆம் தேதி அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்காமல் இருப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும், நம்மிடம் கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை பார்க்காமல் ஆட்சியாளர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் தமிழக அரசு உடனடியாக புதிய சம்பள பேச்சு வார்த்தையே துவங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் வாரிசுதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓய்வு பெற்றவர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும், பழுதான பேருந்துகளே சரி செய்து பாதுகாப்பான பேருந்து வழித்தடங்களில் இயக்க வேண்டும், இதனால் பேருந்து ஓட்டுநர்களும் பொது மக்களுக்கும் பயப்படாமல் பேருந்தில் பயணம் செய்ய ஏதுவாக தமிழக அரசு நாளை நடைபெறும் பேச்சு வார்த்தையில் நல்லதொரு முடிவு எடுத்து பாதுகாக்க வேண்டும் இல்லையென்றால் கூட்டமைப்பு சார்பாக எடுக்கப்பட்ட முடிவின்படி வருகின்ற 9ஆம் தேதி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது அதேசமயம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் நமது வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல் போராட்டம் அறிவித்தவுடன் போராட்டத்தை நிறுத்துவதற்கு காவல்துறை மூலமாகவோ போக்குவரத்து அதிகாரி மூலமாகவோ தடுத்து நிறுத்துவார்கள் இதையெல்லாம் பெரிது படுத்தாமல் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ள வேண்டும் A I T U C, மற்றும் பா ம க போக்குவரத்து கழகத்தின் மண்டல தலைவர்கள் நிர்வாகிகள் உரையாற்றினார்கள் அதுமட்டுமில்லாமல் பொதுமக்களுக்கும் இதுகுறித்து எடுத்துரைத்து நோட்டீஸ் வழங்கி ஆதரவு திரட்டினார்.
வால்பாறை
-P.பரமசிவம்.