திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் வெறிச்சோடி காணப்பட்ட ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் கடந்த 11-06-2023 அன்று பாராளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ,இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தியில் மாற்றம் செய்தும் சட்டங்களை மாற்றி அமைத்தும் தாக்கல் செய்த மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி,
வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவின்படி ஜனவரி 6 சனிக்கிழமையான இன்று ஒரு நாள் மட்டும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்ததால் நீதிமன்ற வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.