கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட அக்கா மலை எஸ்டேட் சூரக்காடு பாடி குடியிருப்பை யானைக் கூட்டங்கள் உடைத்து உள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இரவு நேரங்களில் உலா வரும் யானைகளால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர் வனத்துறை மற்றும் நிர்வாகங்கள் பாதுகாப்பு அளிக்காமல் உள்ளதால் தொழிலாளர்களின் குடியிருப்புகளை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. வனப்பகுதிக்குள் யானைகள் நிற்பதால் வனத்துறையினர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தந்திட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இரவு நேரத்தில் குடியிருப்புகளுக்கு அருகில் வரும் காட்டு யானைகளை விரட்ட வன காவலர்களை ரோந்து பணிகளில் ஈடுபட எஸ்டேட் நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் மற்றும் வனத்துறை பாதுகாப்பு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
காட்டு யானைகள் குடியிருப்புகளை சேதப்படுத்தி வருவது அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் உயிர்க்கும் உடமைக்கும் இழப்பு ஏற்படும் என எஸ்டேட் தொழிலாளர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.