வால்பாறையில் தேயிலை அல்லாத மாற்றுத் தொழில் கறவை மாடு வளர்ப்புக்கு முக்கியத்துவம்!! மக்கள் மகிழ்ச்சி!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தேயிலை தொழிலை தவிர்த்து மாற்றுத்தொழில் இல்லாததால் தேயிலை தொழில் ஈடுபட்டு வரும் பிள்ளைகள் கோயமுத்தூர் திருப்பூர் கரூர் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்காக செல்கிறார்கள் அதேசமயம் இவர்களை தொடர்ந்து பெற்றோர்களும் சென்று விடுகின்றனர் இதனால் தேயிலை தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு ஒரு சில பகுதிகளில் தேயிலை பறிக்காமல் அடர்ந்த வனப்பகுதி போன்று காட்சி அளிக்கிறது.

இதை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கமும் ஆவின் பால் நிறுவனமும் இணைந்து வால்பாறை புது மார்க்கெட் பகுதியில் பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் செயலாளர் பொன் காமராஜ் தலைமையில் கோவை மாவட்ட ஆவின் பால் விற்பனைப் பிரிவு பொது மேலாளர் பால பூபதி துணை பொது மேலாளர் மாவட்ட கூட்டுறவு சார் பதிவாளர் சபரிநாதன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து பால பூபதி கூறுகையில் வால்பாறை பகுதியில் இருந்து வேலைகளுக்காக பெரும்பாலானோர் வெளியூர் செல்வதை தவிர்க்கும் விதமாக நமது பகுதியிலே வேலை வாய்ப்பை உருவாக்க பால் கொள்முதல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மாடு வளர்ப்பதற்கு வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுத் தரப்படும் மாடுகளை பராமரிப்பதற்கு மருத்துவர் நியமிக்கப்படும் மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வசதியும் செய்து தரப்படும் தங்களிடமிருந்து கொள்முதல் செய்த பாலின் அளவைப் பொறுத்து வங்கிகள் மூலம் பணத்தை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் வருடத்திற்கு ஒரு முறை போனஸ் வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வால்பாறை பகுதியில் தேயிலை தொழிலுக்கு மாற்று தொழில் வேண்டும் குறிப்பாக பால் பண்ணை வைக்க வேண்டும் என்று கோரிக்கையை மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் P.பரமசிவம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர் மேலும் நமது நாளைய வரலாறு இதுகுறித்து செய்தியும் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத் துணைத் தலைமை நிருபர்,

-சுரேஷ், பொள்ளாச்சி. 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp