எட்டயபுரத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் 3 ஆண்டுகள் ஆகியும் தாமிரபரணி வைப்பார் திட்டம் ஏன் தொடங்கவில்லை என கேள்வி. !!!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பட்டத்து விநாயகர் கோவில் அருகில் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார், இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியது:
கடந்த அதிமுக ஆட்சியில் தாமிரபரணி வைப்பார் இணைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது மூன்று ஆண்டுகளாகியும் திட்டத் தொடங்கப் படவில்லை, கடுமையான மழையால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டங்களாக பிரித்து ஓட்டப்பிடாரம் காயத்தார் விளாத்திகுளம் எட்டயபுரத்திற்கு வெறும் 1000 ரூபாய் வழங்கியது விடியல் அரசு இது பற்றி சட்டமன்றத்தில் கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் மற்றும் இன்று தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து கோரிக்கையாக கொடுத்துள்ளேன் அதேபோல அதிமுக ஆட்சியில் 470 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பெற்று தரப்பட்டது பின்னர் எம்ஜிஆரின் அரசியல் பயணம் மற்றும் அவரின் சாதனைகளையும் மக்களுக்கு தொண்டர்களுக்கும் பாடல் மூலம் நகைச்சுவை கலந்து பேசினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன் அவர்கள் ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் என்.கே.பெருமாள், விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள், அன்புராஜ், மகேஷ், தனபதி, கவியரசன், சத்தியா ,பிரியா, தனஞ்செயன், காந்தி காமாட்சி, பால்ராஜ், கயத்தார் சாமிராஜ் வாண்டனம் கருப்பசாமி அம்மா பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் என். கே. பி வரதராஜன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.