தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் புதியம்புத்தூர் சந்தையில்
I N D I A வெல்வது நிச்சயம் மாபெரும் பொதுக்கூட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளருமான எம் சி.சண்முகையா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி கருணாநிதி MP அவர்களும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்கள்.
அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசியது:
“அண்ணாமலைக்கு தைரியம் திராணி இருந்தால் எங்கள் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எதிர்த்து தேர்தலில் நிற்க தயாராக இருக்கிறீர்களா அப்படி தேர்தலில் இருந்து டெபாசிட் வாங்கி விட்டால் நான் அரசியலை விட்டு விலக தயார் தமிழ்நாட்டிலேயே அரசியலில் அண்ணாமலை இல்லை என்கிற நிலையை உருவாக்க முடியும் . இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று நினைத்து சில அமைச்சர்கள் மீது அமலாக்குத்துறை வருமான வரித்துறை சிபிஐ வைத்து சோதனை நடத்தினார்கள் எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாத என சவால் விடுகிறேன் . என் மீது கூட அமலாக்குத்துறை வழக்கு இருக்கிறது ஒன்றும் பன்ன முடியாது”. என பேசினார்.
கனமொழி எம்பி அவர்கள் பேசியது:
“தத்துரூபமாக இந்தியா வெல்வது நிச்சயம் என்ற பெயர் பல பேர் மனதில் ஒரு கேள்வியை இருக்கிறார்கள். நேரங்களில் வெளிப்படுத்துகின்றனர். தொடர்ந்து பிரதமர் உட்பட 400 இடங்களில் வெற்றி பெறுவோம் 370 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பரப்புரையை தொடர்ந்து ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக வைத்து இருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் வைக்கக்கூடிய விவாதம் இந்தியா வெல்வது நிச்சயம் இதில் இரண்டு அர்த்தங்கள் இருக்கக்கூடியது ஒன்று பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் இந்திய நாடே தோற்றுப் போகும் என புரிந்து கொள்ள வேண்டும் அவர்களுடைய வெற்றி என்பது இந்தியா நாட்டிற்கு தோல்வி. இன்னொன்று இந்தியா கூட்டணி வெள்ள வேண்டும் அவர்கள் இந்த அளவுக்கு பெரும்பான்மையோடு நம்பிக்கையோடு இருக்கிறார்கள். வட மாநிலங்களில் வெற்றி பெற்று விடுவோம் எனவும் சூழ்யுரைத்து கொண்டிருக்கிறார்கள். தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி இமசலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் அசைத்து கூட பார்க்க முடியாது கேரளாவில் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா தெரியவில்லை என்ற தெரியாத நிலையில் இருக்கிறார்கள். ஆட்சி அங்கு மாற்றப்படும் என்ற உறுதியோடு நாம் பணியாற்ற வேண்டும். இன்று பாஜக கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம் கட்சிக்கு நிதி யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் எந்த கணக்கும் கொடுக்க வேண்டாம். கடந்த ஆறு ஆண்டுகளில் பாஜக ரூ. 6564 கோடி கட்சி நிதியாக பெற்றுள்ளது. இவ்வளவு நிதி எங்கிருந்து வந்தது யார் கொடுத்தது தெரியாது. நாட்டிலே பணக்கார கட்சியாக உள்ளது. அவர்கள் கொண்டு வந்த சட்டம் உச்சநீதிமன்றம் தவறானது செல்லாது என சுட்டிக்காட்டி உள்ளது. மாற்ற முடியாது எதுவும் இல்லை மக்கள் நினைத்தால் தமிழர்கள் நினைத்தால் தி.மு.க நினைத்தால் எதையும் மாற்றிக் காட்ட முடியும் என்ற உறுதியோடு இருக்க வேண்டும். தேர்தலில் பணியாற்ற வேண்டும் வெற்றி நிச்சயம் என்ற கொள்கையோடு இருக்க வேண்டும். பெண்களை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்த ஆட்சி கலைஞர் ஆட்சி. யாருக்கும் எதிரானவர்களாக திமுக இல்லை. அதே போல திமுக என்றால் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி, திமுக யாருக்கும் எதிரானவர்களாக அல்ல. உண்மையிலேயே யார் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றால் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருக்கக்கூடிய மக்களுக்கு பெண்களுக்கு யார் உரிமை தர மறுக்கிறார்களோ அவர்கள் தான் பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரானவர்கள். நமக்கு பாடுபடக்கூடிய இயக்கமாக திமுக திகழ்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 40 இடங்களிலும் இந்தியா கூட்டணி வென்று காட்ட வேண்டும் என்று அனைவரும் ஒருமித்த கருத்தோடு உழைக்க வேண்டும்.” இவ்வாறு கனிமொழி எம்.பி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில்
ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சரவணகுமார், ராமசாமி, சுரேஷ்காந்தி, ஆஸ்கார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சண்முகையா எம்.எல்.ஏ வரவேற்று பேசினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூரமணி, மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓட்டப்பிடராம் யூனியன் தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.