கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கேரளாவில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆட்சியில் இந்த ஆண்டுக்கான நிதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் மலையோர விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த நிதி அறிக்கை அமைந்துள்ளதாக அறிவித்ததால் மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுமார் 1600 கோடி ரூபாய் நறுமணப் பொருட்களின் விலை மாற்றம் மற்றும் சுற்றுலா தல மேம்பாட்டு மேம்படுத்துவதற்கான நிதி மட்டுமல்லாது மாநிலத்தில் ஆறுகளில் மணல் அல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் புதிய வர்த்தகங்களை தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 2 லட்சத்து 34 ஆயிரத்து 44 தொழில் வாய்ப்புகள் விவசாயி பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளதாகவும் நிதி அமைச்சர் கே என் பாலகோபாலன் தெரிவித்துள்ளார்.
அதோடு கூடுதலாக உலக வங்கியில் இருந்து கடன் பெற அனுமதி பெற்றுள்ளதாகவும் அதன் மூலமாக விவசாய முதலீடுகள் நவீனப்படுத்தப்படவும் சீக்கிரத்தில் அனைத்தையும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். விவசாய சம்பந்தமான தொழில்கள் முன்னேற்றுவதற்காக தொழில் முனைவோர் முதல் தற்போது தொழில் செய்வோர் வரைக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன மட்டுமல்லாது ரப்பரின் விலை சுமார் 170 இருந்து ரூபாய் 180 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் கேரளா சங்கங்களும் விவசாயிகளும் கிறிஸ்துவ அமைப்புகளும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாகவும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்
மூணாறு.