கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தமிழ் தெரிந்த அலுவலரை பணியமர்த்த மனு கொடுக்கும் போரட்டம் . !!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரெயில் நிலையத்தில் பயண சீட்டு கொடுக்கும் ஊழியர் தமிழ் தெரிந்த அலுவலரை நியமிக்க வேண்டும், மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என கோரி நகர செயலாளர் சரோஜா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தென் தமிழகத்தில் இரயில்வே துறையில் வருவாய் ஈட்டுவதில் கோவில்பட்டி 2வது இடத்தில் உள்ளது, இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இரயில் மூலம் தினம் சுமார் 5000 மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர். சமீபத்திய காலங்களில் பயணம் சீட்டு வழங்கும் இடத்தில் தமிழ் தெரியாத அலுவலர்கள் பணிபுரிகின்றனர். இதான் காரணமாக காலதாமதம் ஏற்படுகின்றன மேலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் எனவே தமிழ் தெரிந்த அலுவலரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

இதில் தாலுகா செயலாளர் பாபு,ஏ ஐ டி யூ சி மாவட்ட தலைவர் பரமராஜ்,சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம்,நகர துணை செயலாளர் முனியசாமி,வழக்கறிஞர் ரஞ்சனி கண்ணம்மா,மகளிரணி கோமதி,மாவட்டக்குழு மற்றும் நகரக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp