உலக சாதனையாக போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை மாநகர காவல் துறை மற்றும் பார்க் கல்வி நிறுவனங்கள் இணைந்து டிஜிட்டல் வடிவிலான போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை அதிக அளவில் மாணவர்கள் ஏற்றுக் கொண்டு உலக சாதனை படைத்தனர். இதில் மாணவ மாணவியர்கள் டிஜிட்டல் வடிவில் உறுதிமொழி அளித்தனர்.மொத்தம் 1,37,294 மாணவர்களிடம் உறுதிமொழிகள் பெறப்பட்டதில் 1,12,375 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. இந்த முயற்சியையும் பதிவையும் உலக பதிவு யுனியன் ஏற்றுக் கொண்டு, உலக சாதனையாக அங்கீகாரம் அளித்துள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள 180 கல்லூரிகள் இந்த சாதனை முயற்சியில் பங்கேற்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான 2023 ஜூன் 26 ல் இந்த இயக்கம் துவக்கப்பட்டது. டிஜிட்டல் வடிவில் உறுதியேற்பு 2023 செப்டம்பர் 12-ம் தேதி துவக்கப்பட்டது. 2024 ஜனவரி 31-ம் தேதி நிறைவு பெற்றது. 2023 டிசம்பர் இறுதியில் ஒரு லட்சம் உறுதியேற்பை எட்டியது. உலக சாதனை யுனியன் பிரதிநிதி கிரிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் கோவை மாநகர காவல்துறை பார்க் கல்வி நிறுவனங்களுக்கும் சான்றிதழை வழங்கினார்.இதில் பங்கேற்ற கல்லூரிகளை சேர்ந்த 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு போதை பொருள் இல்லாத கோவையின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவர். இவர்கள் மாணவர்களிடையே போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, போதை பொருட்கள் உள்ளனவா என்பதையும் கண்காணிப்பார்கள். மாணவர்களுக்கான ஹெல்ப்லைன் ஒன்றும் உருவாக்கப்படும். சான்றிதழ் வழங்கும் விழா கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் கல்வி நிறுவனங்களில் வளாகத்தில் நடைபெற்றது.
-சீனி, போத்தனூர்.