சிறையில் அடைக்கப்பட்டார் MyV3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்த்…!!!

MyV3 Ads மீது சில நபர்கள் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் உட்பட 150 க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மை வி3 நிறுவனம் விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்தி ஆனந்த் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் சத்தி ஆனந்த் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது சத்தி ஆனந்த் கூறுகையில், ”மை வி3 ஆட்ஸ் நிறுவனம் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாகவும், தங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்க வந்துள்ளேன்.” என்றார்.


தொடர்ந்து,புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை விட்டு அகல மறுத்ததால் சக்தி ஆனந்த் உட்பட அவரது ஆதரவாளர்கள், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அதனைத் தொடர்ந்து காவல் ஆணையாளரை பார்த்து விட்டு தான் செல்வோம் என ஆணையாளர் அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


அதனைத் தொடர்ந்து சக்தி ஆனந்த் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து சக்தி ஆனந்த் இரவோடு இரவாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் இன்னும் விடுவிக்கப் படவில்லை.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp