தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி கோவிலில் அமைந்துள்ளது . தை 18 ம் தேதி நேற்று காலை 10.30 மணியளவில் 13 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஆலயக்குழு தலைவர் முருக பூபதி தலைமையில் நடைபெற்றது.
காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மாஹி கணபதி ஹோமம் மதியம் 12 மணிக்கு வருஷாபிஷேகம் நிகழ்ச்சியி நடைபெற்றது.
பின்னர் மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி அதைத் தொடர்ந்து 2023 ஆண்டு நடைபெற்ற சித்திரை திருவிழா வரவு செலவு கூட்டம், 2024 ஆண்டு நடைபெறுகின்ற சித்திரை திருவிழா சம்பந்தப்பட ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்தது.
இது விழாவில் 500க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர் மற்றும் ஆலய குழு உறுப்பினர்கள் செந்தில் குமார் மற்றும் சுப்புராஜ் பொருளாளர் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட தலைமை நிருபர்,
-முனியசாமி.