கோவை மாநகராட்சி போத்தனூர் பகுதியில் தற்பொழுது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அகலப்படுத்தப்படும் சாலைகளின் நடுவில் மையத்திட்டு ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் முறையாக சென்று வர வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதேபோன்று போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் ஜி.டி டேங்க் பகுதியில் இருந்து ஈச்சனாரி செல்லும் சாலை வரை, இந்த பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு மையத்திட்டு ஏற்படுத்தப்பட்டு இருந்தது இந்த மையத்திட்டு பகுதியில் கோயம்புத்தூர் மாநகராட்சி
SUIDF 2022-2023 திட்டத்தின் கீழ் மையத்திட்டு மின் கம்பங்களுடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன.
இதனை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை அந்தப் பகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். 16-02-2024 அன்று மாலை சுமார் 6.30 மணி அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்சிக்கு அப்பகுதியை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாற்றுக் கட்சி நண்பர்கள் என அனைவரும் வந்திருந்தனர்
இந்த நிகழ்ச்சியில் 99வது மாமன்ற உறுப்பினர் மு.அஸ்லாம்ப பாஷா அவர்கள் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைக்கப்பட்டது இதில் குறிச்சி வடக்கு பகுதி செயலாளரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.ஏ.காதர். கோவை மாநகராட்சி ஆளுங்கட்சித் தலைவர் இரா கார்த்திகேயன். மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் முரளி , மாணிக்கம். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புவனேஷ்.முகமது ஜின்னா . மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சரண்யா .சபரி ராஜ்.மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் சம்சுபாய் . நடராஜன்அண்ணன்.. கண்ணன்.மாதவன். சீரின் அக்கா. குமரன். கமலக்கண்ணன். ஷாஜகான் ரமேஷ். சாதிக். கோபால் . சௌந்தரராஜன். தம்பு. அசரப்பாய், சுலைமான்பாய், கார்மேகம் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சி.ராஜேந்திரன்
-ஈசா.