தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 61 பஞ்சாயத்துகளில் இருந்து சிறந்த முன்மாதிரி கிராமாக பாஞ்சாலங்குறிச்சி தேர்வு செய்யப்படுள்ளது.
அதற்கான கள ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் பயிற்றுனர் காலாதேவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் செயின்ட் மேரிஸ் கல்லூரி சார்பில் உதவிப் பேராசிரியர் டாக்டர்
வினோபா கிளாடிஸ் அவர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஹெப்சிபா காளி தேவி இருதயலிப்னா ரியோலா ஆகியோர் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் சுகாதாரம் தண்ணீர் தொட்டி கிராம சாலை அங்கன்வாடி மையம் தொடக்க பள்ளி ஊரட்சி மன்ற அலுவலகம் ரேசன் கடை என பல்வேறு பகுதியில் கள ஆய்வுகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி அவர்கள் ஊரட்சி தலைவர் கமலாதேவி யோகராஜ் மற்றும் தூய்மை பணியாளர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.