கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து – மூன்று விவசாயிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் மூன்று பேர் தங்களது காரில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்ததாக தெரிகிறது.
பின்னர் பணி முடிந்து மூன்று பேரும் கருமத்தம்பட்டி செல்வதற்காக காரில் சென்றனர். அப்போது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காரின் உள்ளே சிக்கிய மூவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் மூவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து பொதுமக்கள் போலீசார் உதவியுடன் காரை சாலை ஓரத்தில் தள்ளி வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.