கோவை மாவட்டம் வால்பாறை தமிழக வெற்றி கழக கட்சியின் வால்பாறை நகர தலைவர் ஆண்ட்ரூஸ், நகர செயலாளர் செய்யது அலி முன்னிலையில் அண்ணா நகர் லோகேந்திரன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் தமிழக வெற்றி கழக கட்சியில்
இணைந்தனர்.
இந்நிலையில் கட்சியில் இணைந்த அனைவருக்கும் நகர தலைவர், செயலாளர் வாழ்த்தி வரவேற்று சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இதுகுறித்து நகர தலைவரும், செயலாளரும் கூறுகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதியார், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்கி, கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு உள்ளிட்டோரின் ஆணைப்படி, சொல்படி, வழிகாட்டுதல், துணையோடு சிறப்பாக தமிழக வெற்றி கழகம் வால்பாறையில் செயல்படுவதாக தெரிவித்தனர் மேலும் இரவு பகல் பாராமல் மக்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறோம் என்றனர் ஒருமித்த குரலோடு.
-M.சுரேஷ்குமார்.