கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள ரொட்டிக்கடை என்னும் இடத்தில் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் மிகவும் வலுவிழந்து தரமற்ற முறையில் இடியும் தருவாயில் உள்ளது. மேலும் பள்ளியை சுற்றிலும் சுகாதாரமற்ற முறையில் குப்பைகளும் கழிவுகளும் கிடக்கின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முறையாக பராமரிக்கப்படாத இந்த பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் பள்ளி குழந்தைகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியாபாரிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் அந்த பகுதியில் வால்பாறை நகராட்சி சார்பாக கழிப்பிடம் உள்ளது ஆனால் இந்த கழிப்பிடம் தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளதால் மிகவும் சுகாதாரமற்ற முறையில் முறையான பராமரிப்பின்றி பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது இதனால் அந்தப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் கழிப்பிடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வலுவிழந்து இடியும் தருவாயில் உள்ள பள்ளி கட்டடத்தை சீரமைத்து பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் மேலும் முறையான பராமரிப்பின்றி தண்ணீர் வசதி இன்றி கிடக்கும் நகராட்சி கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.