தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா நான்கு ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.173 லட்சத்தில் புதிய பணிகளுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.35.71 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம் உட்பட நான்கு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். யூனியன் துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன் முன்னிலை வைத்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ புதிய அங்கன்வாடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டில் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் கூடுதல் ஆணையாளர் கிரி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவர் முத்துக்குமார், சண்முகையா, ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, ஒன்றிய அவைத்தலைவர் பார்த்தசாரதி உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கீழ் ஆதனூர் ஊராட்சி மிளகுநத்தம் கிராமத்தில் ரூ.35.86 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டிடம் உட்பட நான்கு பணிகள், சந்திரகிரி பஞ்சாயத்து கீழசெய்தலை கிராமத்தில் 35.76 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் உட்பட மூன்று பணிகள், கே.சண்முகபுரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் ரூ.33.64 லட்சம் செலவில் உட்பட ஐந்து பணிகள், வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ரூ.30.10 லட்சம் செலவில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் பணிகள் ஆகிய கிராமங்களில் உள்ள பணிகளுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.