கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் பூப்பார் அருகே உள்ள ராஜா காடு காஞ்சிர பாலம் என்ற பகுதியை சார்ந்த சாஜிவ் என்பவர் வசித்து வருகிறார். தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் சஜீவின் பேரில் சந்தேகம் எழும்ப சில நாட்களாக அவரை அருகில் உள்ள காவல் துறை மதுபான ஒழிப்பு அதிகாரியிடம் கூறி அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
சந்தேகத்தின் பெயரில் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது. சுமார் பதினேழு லிட்டர் கள்ளச்சாராயம் வீட்டிலும் மற்றும் தோட்டத்தில் உள்ள செட்டிலும் பாதிக்க வைத்திருந்தது தெரியவந்துள்ளது. தேர்தல் நேரங்களில் இதை விற்பனை செய்யப் போவதாகவும் தெரியவந்துள்ளது. உடனடியாக இதில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க முயற்சி செய்தபோது கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் தப்பி ஓடிள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்ற ஆண்டு வருகிறது விரைவில் தப்பி ஓடிய குற்றவாளிகள் அனைவரும் படிக்கப்படுபவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூனாறு.