கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சி பிரிவு பகுதியில் காலை சுமார் 10:30 மணி அளவில் பொங்காளி அம்மன் கோவில் அடுத்து உள்ள வளைவில் திரும்பும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து குளத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது காரை ஓட்டி வந்தவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து நடந்த உடன் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கவிழ்ந்த வாகனத்தை திருப்பி ஓரமாக அப்புறப்படுத்தினர்.
விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்து நடந்த சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விபத்தால் அப்பகுதியில் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட் அணிந்தும் வேகத்தை குறைத்து போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தும் சென்றால் விபத்துகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்.
-சி.ராஜேந்திரன்.