கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசின் மெரிட்டா இவர் அதே பகுதியில் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தனது மகளுடன் அருகில் உள்ள டைலர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து ஜேசின் மெரிட்டா கழுத்தில் அணிந்த இந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றார்.
அதிர்ச்சி அடைந்த ஜேசின் மெரிட்டா திருடன் திருடன் என சத்தம் போட்டால் அக்கம்பக்கத்தில் உள்ள வருவதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து ஜேசின் மெரிட்டா
ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதுபோன்று நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் இவரது மனைவி கவிதா தனது மகளை பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து வர மொபட்டில் சென்றால் அப்பொழுது அடையாளம் தெரியாத நபர் மோட்டார் சைக்கிளில் வந்து கவிதா கழுத்தில் இருந்த தாலிச் செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
அப்போது கவிதா தனது செயினை காப்பாற்ற முயற்சி செய்தார் இவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் திருடனை பிடிக்கும் முயன்றனர் ஆனால் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.