கோவை : இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் அண்மையில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை தளுவி எடுக்கப்பட்ட படமாகும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கேரள மாநிலத்தை சேர்ந்த நண்பர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் போது அங்குள்ள குணா குகைக்கு செல்வர். அப்போது குணா குகையில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்கையில், ஒருவர் குழிக்குள் விழுந்து சிக்கி கொள்வார். அவரை சக நண்பர்கள் காவல்துறை உதவியுடன் எவ்வாறு மீட்கிறார்கள் என்பதுதான் கதை.
இப்படத்தில் நடிகர் கமலஹாசனின் திரைப்படத்தில் வரும் “கண்மனி” பாடல் இடம்பெற்றிருக்கும். இதனாலேயே இப்படம் கேரள மக்கள் மத்தியிலும், தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த நடிகர் கமலஹாசனும் படக்குழுவினரை பாராட்டி குணா பட நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இப்படக்குழுவினரை பாராட்டும் விதத்திலும் இயக்குநரை பெருமை படுத்தும் விதத்திலும், கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற கலைஞர் மரப்பட்டையில் குணா குகை போல் வடிவமைத்து மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் முக்கிய காட்சியான நண்பனை குகையில் இருந்து மீட்கும் காட்சியை வடிவமைத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.