கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் சுற்றுவட்டாரத்தில் இருபது வருடமாக சேதமடைந்த சாலைகளை கூட சரி செய்யாத அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளது.
மாட்டுப்பெட்டி டாப் டிவிஷன்,தென்மலை,சோத்துப்பாறை,குண்டுமலை,அப்பர் குண்டுமலை, பென்மோர், செண்டுவாரை டாப் டிவிஷன், செண்டுவாரை பி ஆர் டிவிஷன், வட்டவாடை போன்ற பகுதிகளில் உள்ள சாலைகள் தான் கடந்த 20 வருடங்களாக சேதம் அடைந்து கிடப்பது. குண்டுமலை சாலை வழியாக மூணாறு டவுன் வர வேண்டும் என்றால் 20 கிலோ மீட்டர் செல்லக்கூடிய தொழிலாளிகள் எடுக்கக்கூடிய நேரம் பல மணி நேரம் ஆகிறது.
செண்டுவாரை டாப் டிவிஷன், பி ஆர் டிவிஷன் சாலைகளிலும் மோசமாக உள்ளதால் இந்த எஸ்டேட்பகுதிகளுக்கு ஆட்டோ உட்பட உள்ள வாகனங்கள் இந்த பகுதிக்கு அழைத்தாலும் வருவது கிடையாது. அவ்வாறு வரவேண்டும் என்றால் அதிக பணம் கொடுக்க வேண்டும் இது சாதகங்களை மக்கள் தலைவரிடம் அரசிடம் அறிவிக்கப்பட்டது என்றாலும் அரசியல் தலைவர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளிகள் தான் தேர்தலைப் புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளது.
சாலைகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அவசர சிகிச்சைக்கு கூட ஆம்புலன்ஸ் பயணித்து செல்வதற்கு பல மணி நேரங்கள் எடுக்கிறது இதன் காரணமாக பல உயிர்களும் பறிபோகின்றது. செண்டுவாரை மக்கள் தலைமையில் கலெக்டர், எம்பி, எம் எல் ஏ, ஆகியவர்களுடன் பேசியும் மனு அளித்தும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் தலைமையில் குற்றச்சாட்டும் இருந்துள்ளது. இதன் காரணமாக 2024 பாராளுமன்ற தேர்தலை செண்டுவாரை பொதுமக்கள் புறக்கணிப்பதாக தகவல். இந்த சாலை காரணமாக சமீபத்தில் மூன்று உயிர்கள் பலியாகி உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன்.கா, மூணாறு.