கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் அமைந்துள்ள எல்லப்பட்டி தேவாலயத்தில் புனித வெள்ளி மிக சிறப்பாக நடைபெற்றது. விஜயபுரம் மறை மாவட்டத்தில் உட்படும் மூணாறு பங்கின் கிளை பங்கான எல்லப்பட்டி தேவாலயத்தில் ஏராளமான கிளை பங்குகள் உட்படுகின்றன.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூர்ந்து எல்லப்பட்டி மற்றும் அனைத்து கிளை பங்குகளில் உள்ள கிறிஸ்தவ விசுவாசிகள் துக்க வெள்ளியை அனுசரித்தனர். துக்க வெள்ளியின் பாகமாக கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றது ஆயிரக்கணக்கான விசுவாசிகள் பிரார்த்தனைகளில் பங்கெடுத்தனர். எல்லப்பட்டி தேவாலயத்தில் காலை 9 மணிக்கு துவங்கிய சிலுவைப்பாதை பயணம் மதியம் ஒரு மணிக்கு நிறைவடைந்தது.
சிலுவைப்பாதை நிகழ்வு புனித குழந்தை தெரேசம்மால் தேவாலயம் எல்லப்பட்டியில் இருந்து ஒரு உயரமான மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும் கிளை பங்குகளிலுள்ள தேவாலய பொதுமக்கள், கே சி ஒய் எம் இளைஞர்கள், வயதானவர்கள் அனைவரும் தூக்கி செல்வதற்கு வாய்ப்புகள் கிடைத்தது பின்னர் மதியம் நேர்ச்சை கஞ்சிகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூன்று மணி அளவில் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றியது பங்குத்தந்தை அலெக்ஸ் மற்றும் துணை பங்குதந்தை டின்டோ தலைமையில் திருப்பலிகள் நடைபெற்றது. துக்க வெள்ளி நிகழ்வுக்காக ஏராளமான கிறிஸ்தவ விசுவாசிகள் மற்றும் அந்த வழியாக பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளும் திருப்பலியிலும் சிலுவை பாதையிலும் பங்கெடுத்தனர்.
கிளை பங்குகளிலுள்ள தேவாலயங்கள் செண்டுவாரை, சிட்டிவாரை, அருவிக்காடு, குண்டளை, டாப் ஸ்டேஷன், புதுக்கடி, சான்டோஸ், செண்டுவாரை டாப், எஸ் பி ஆர் டிவிஷன், வட்டவாடை, தீர்த்தமலை ஆகிய தேவாலயங்களை உள்ளடக்கியதுதான் எல்லப்பட்டி தேவாலயம். கிளை பங்குகளில் பிரார்த்தனைகள் எதுவும் நடைபெறவில்லை, அனைத்து திருப்பலி மற்றும் சடங்குகளும் எல்லப்பட்டி தேவாலயத்தில் தான் நடைபெற்றது.
-மணிகண்டன் கா, மூணாறு.