கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் கேரளாவில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் கேரளாவில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், கள்ளச்சாராயங்கள் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து சிறப்பு காவல் படையினர் ஆங்காங்கே கிடைக்கும் தகவலின் படி சோதனை செய்து வருகின்றனர். சோதனையில் தற்பொழுது ராமக்கல் மேட்டில் 285 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் அதனை உருவாக்கும் பாத்திரங்கள் பொருட்களை உடுமஞ்சோலை சிறப்பு தனிப்படை அதிகாரி கே வினோத் அவர்களின் தலைமையில் கைப்பற்றப்பட்டன.
விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு மிகவும் கடுமையான தண்டனை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.