கோவை மாவட்டம் வால்பாறை அருகே அனலி எஸ்டேட்டில் செல்வரத்தினம் ( வயது 65) த/பொ வைரமுத்து சுமார் 3 மணி அளவில் எஸ்டேட்டில் வேலை செய்யும் போது எதிர்பாராத விதமாக காட்டெருமை தாக்கியதில் செல்வரத்தினம் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு உரிய சிகிச்சை சிகிச்சை அளிக்க முடியாமல் மேல் சிகிச்சைக்காக அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காட்டெருமை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்தது வால்பாறை பகுதியிலும் அரசு மருத்துவமனை பகுதியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதிப்புக்குள்ளானவரை அரசியல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
–P.பரமசிவம், வால்பாறை.