தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், நாளை (ஏப்.19) பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யும் நோக்கத்தோடு சிலர் அதிக அளவில் மது பாட்டில்களை பதுக்கி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து குளத்தூர் பகுதியில் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குளத்தூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையில் போலீசார் குளத்தூர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 40) தகப்பனார் பெயர் நடராஜன், குளத்தூர் முனியசாமி (வயது 36) தகப்பனார் பெயர் சுப்பையா, நடுத்தெரு புளியங்குளம் டேனிஸ் (வயது 22) தகப்பனார் பெயர் ஸ்டாலின், கீழவைப்பார் செல்வக்குமார் (வயது 24) தகப்பனார் பெயர் பெரியசாமி, வடக்கு தெரு வெங்கட்ஸ்புரம் ரானே பிரேம்குமார் (வயது 22) தகப்பனார் பெயர் முருகன், நடுத்தெரு வைப்பார் முனியசாமி (வயது 43) தகப்பனார் பெயர் நடராஜன், வேடப்பட்டி ராஜா துரை (வயது 38) தகப்பனார் பெயர் காசிமாரியப்பன், குளத்தூர் ரமா கிருஷ்ணன் (வயது 18) தகப்பனார் பெயர் உமையான், வெங்கடாசலபுரம் மாரியப்பன் (வயது 48) முத்துபாண்டி குளத்தூர் அனுமதியின்றி விற்பனை செய்ய மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் 9 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ய வைத்திருந்தது உறுதியானது. அவரிடம் இருந்து 215 மது பாட்டில்கள், பீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து 9 நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.