கோவை – மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து!!!

கோவை மேட்டுப்பாளையம் இடையே தினமும் 5 முறை மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இருப்புப்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று கோவை – மேட்டுப்பாளையம் இடையே கோவை இருந்து மேட்டுப்பாளையத்திற்கு
காலை 11.50 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம் – கோவை இடையே காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

அதே போல் வரும் 6ம் தேதி கோவை – மேட்டுப்பாளையம் இடையே மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம் – கோவை இடையே மாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் 8 , 11 ,13ம் தேதிகளில்கோவை – மேட்டுப்பாளையம் இடையே மதியம் 3.45 மணி,
மேட்டுப்பாளையம் – கோவை இடையே மதியம் 12.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அதே போல் வரும் 14 , 16 , 20 , 22 , 24ம் தேதிகளில் கோவை – மேட்டுப்பாளையம் இடையே காலை 11.50 மணி, மேட்டுப்பாளையம் – கோவை இடையே காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp