கோவை லுலுவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் காரணமாக உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
கோவை லட்சுமி மில் அருகே கடந்த ஆண்டு லுலு ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது. திறக்கப்பட்டதில் இருந்து மாலிற்கு வரும் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கிறது.
இந்தியாவில் கொச்சின், திருவனந்தபுரம், பெங்களூரு, திருச்சூர், ஹைதராபாத், லக்னோ போன்ற நகரங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட் கிளைகள் உள்ளது.
தமிழக முதலமைச்சர் வெளிநாடு பயணமாக அமீரகம் சென்ற போது லுலு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன்படி தமிழகத்தில் முதல் கிளை கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட கிளைகளை தொடங்க லுலு நிறுவனம் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை லுலு மாலில் தற்போது வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வந்துள்ளது. தற்போது லுலு மாலில் விற்பனையாளர் மற்றும் காஷியர் வேலைக்கு ஆட்கள் தேவை உள்ளது. விற்பனையாளர் பணிக்கு (ஆண் மற்றும் பெண்) 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அல்லது டிகிரி முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். காஷியர் வேலைக்கு பிகாம் அல்லது ஏதாவது ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று முதல் வரும் 23ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வேலை தேடும் இளைஞர்களே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
2 Responses
I want besr jib immediately
I want best job immediately