இன்று தமிழக மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் தங்களின் ஜனநாயக கடமையை வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்களின் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தனது சொந்த கிராமமான ராமச்சந்திராபுரம் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் தனது வாக்கினை தனது மனைவி திருமதி ரெபேக்கா அனிதா மார்க்கண்டயேனுடன் சென்று வாக்களித்தார்.
நாளை வரலாறு செய்திக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.