தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அயிரன்பெட்டியில் உள்ள டி டி ஏ தொடக்க பள்ளியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா அவர்கள் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.
மேலும் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கருணாநிதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பணியாற்றியது குறித்தும். மேலும் இப்பகுதி மக்கள் திமுக ஆட்சியில் செய்த நல்ல பல திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை திட்டம், மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற எண்ணில் அடங்கா திட்டங்களை நினைவில் கொண்டுள்ளதாகவும் .அதனால் இப்பகுதியில் திமுகவின் வாக்கு வங்கி அதிக அளவில் இருப்பதாகவும் கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.