தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை ஆனந்தவல்லி அம்மாள் உடனுறை கைலாசநாத சுவாமி கோவில் கயத்தார் மன்னராலும் பின்னர் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் மன்னராலும் அதனைத் தொடர்ந்து எட்டப்ப நாயக்க மன்னரால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஆலயம் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோவில் ஆகும்.
இக்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 14ம்தேதி காலை 11.30 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் கணேஷ் தலைமையில் கொடி ஏற்றப்பட்டன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர் சார்பில் காலை 8 மணிக்கு மற்றும் இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் ஊரின் வீதி வழியாக சப்பர வீதி உலா நடக்கிறது.
9.வது திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து சுவாமி, அம்பாள் 9மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதையடுத்து காலை 9.45 மணிக்கு பக்தர்களின் கரகோஷங்கள் மற்றும் மேளதாளம் முழங்க விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணை தலைவர் காசி விஸ்வநாதன் அவர்கள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்கணேஷ் ஆகியோர் தலைமையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
திருத்தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி 11.30 மணிக்கு பழைய நிலையை அடைந்தது. இதையடுத்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடந்தது. இதில் பசுவந்தனை மற்றும் சுற்றுவட்டார 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். 10.வது திருவிழாவான இன்று தீர்த்தவாரி திருவிழாவும், 11.வது திருவிழாவான நாளை சுவாமி அம்பாளுக்கு இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் கணேஷ், மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன், பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி, உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பத்மா, பஞ்சாயத்து தலைவர்கள் லட்சுமி சிதம்பரம், ஆறுமுகபாண்டி, யூனியன் ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் உட்பட கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.