புதியம்புத்தூரில் த.மா.க வேட்பாளர் விஜயசீலன் ஆதரித்து ஜி.கே. வாசன் பிரச்சாரம்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள தமாக கட்சி சார்பில் போட்டியிடும் SDR விஜய்சீலன் அவர்களை ஆதரித்து ஜி.கே வாசன் அவர்கள் புதியம்புத்தூர் பஜாரில் வாக்கு சேகரித்தார்.

பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மிகப் பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கபட்டது. ஜி.கே. வாசன் அவர்கள் பேசியது வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான இந்த தேர்தலில் மோடி அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் பாஜக கூட்டணியில் உள்ள தமாக விஜய்சீலன் அவர்களுக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். மகளிர் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் மோடி தனது ஆட்சியில் 37 லட்சம் மகளிர்க்கு தமிழ் நாட்டில் இலவசமாக எரிவாயு கொடுக்கப்பட்டுள்ளது.

முத்ரா கடன் திட்டத்தில் மூலம் சுமார் 5 கோடிக்கு கடன்கள் 67% மகளிர் பெற்றுள்ளனர் . அதைப் போல ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு 11.4 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 62.4 லட்சம் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுகவில் கொடூர ஆட்சி பற்றி பேசாமல் இருக்க முடியாது பால் விலை உயர்வு மின்சார உயர்வு பத்திரப்பதிவு உயர்வு என போய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்துகிறது. ஆசிரியர் அரசு ஊழியர் போக்குவரத்து ஊழியர்கள் யாருடைய குறைகளை தீர்க்க முடியாத அரசு விடியல் அரசு உள்ளது மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் திட்டம் டாஸ்மாக் வருகிற திட்டம் இதற்கு தமிழ் நாட்டில் மக்கள் முற்றுப்புள்ளி வேண்டும்.

புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைக்க மக்களில் நீண்ட நாட்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். செல்போன் தொழிற்சாலை புதிய திட்டங்களை தமது வேட்பாளர் செயல்படுத்துவார். தூத்துக்குடியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு அமைச்சர் இவ்வளவு பேர் இருந்தும் தூத்துக்குடி வளர்ச்சி அடையவில்லை என்றால் அதற்கு காரண மக்கள் பிரதிநிதிகள் ஆகிய திமுக தான் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் கிஷோர் குமார் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இணை அமைப்பாளர் மாவட்டச் செயலாளர் வக்கீல் செந்தில் குமார் பிரபு, ஒன்றிய தலைவர் சரவணன், அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு மாநில செயலாளர் கோமதி ராஜ், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் செல்வின் ,மாவட்ட துணைத் தலைவி ஹேமா மாலினி, ஒன்றிய பொதுச் செயலாளர் முத்தமிழ் செல்வன் மற்றும் அமமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அனந்தப்பன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp