கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அம்பராம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மே ஏழாம் தேதி செவ்வாய்க்கிழமை இன்று மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்பொழுது முக்கிய வீதிகள் வழியாக வந்த பக்தர்களுக்கு மத நல்லிணக்கம் பொருட்டு மக்கள் நீதி மைய கட்சியின் சார்பாக கோவை மாவட்ட வால்பாறை தொகுதி மாவட்டத் துணைச் செயலாளர் கமல்பாவா அனைத்து பக்தர்களுக்கும் குளிர்பானம் கொடுத்து பக்தர்களை நெகழ்ச்சி அடையச் செய்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மைய கட்சியின் ஆனைமலை ஒன்றிய செயலாளர் உதயகுமார், ஜெயலாப்தீன், அலாவுதீன் மற்றும் அஜீஸ்மீன் போன்றவர்களும் கலந்து கொண்டனர்.
-P.சின்ன முத்துசாமி, ஆனைமலை.